×

போராட்டத்தைக் கைவிடாவிட்டால் மருத்துவர்களின் இடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும் : தமிழக அரசு எச்சரிக்கை..!

கடந்த 25 ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25 ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 29 ஆம் தேதி இரவு அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு வார்த்தையின்
 

கடந்த 25 ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 25 ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 29 ஆம் தேதி இரவு அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு வார்த்தையின் பிறகு, போராட்டத்தை ஒத்தி வைப்பதாகக் கூறிய மருத்துவர்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. அதையும் மீறி, இன்று 7 ஆவது நாளாகத் தொடர்வதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகளின் நிலைமை கேள்விக் குறியாகியுள்ளது. 

இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதால், தமிழக அரசு அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, இன்று மாலை 2 மணிக்குள் மருத்துவர்கள் அவர்களது பணிக்குத் திரும்பாவிடில், மருத்துவர்களின் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.இதனால், அரசு மருத்துவர்கள் தங்கள் பணிகளை இழக்க நேரிடும். இந்த எச்சரிக்கையை ஏற்று, இன்று மதியத்திற்குள் அரசு மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.