×

போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை…!

ஊதிய உயர்வு, உயர்படிப்புக்கு 50% சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 24 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு, உயர்படிப்புக்கு 50% சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 24 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ள புறநோயாளிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. போராட்டத்தைத் தடுக்க ஏற்கனவே சுகாதாரத்துறை
 

ஊதிய உயர்வு, உயர்படிப்புக்கு 50% சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 24 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஊதிய உயர்வு, உயர்படிப்புக்கு 50% சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 24 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ள புறநோயாளிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. போராட்டத்தைத் தடுக்க ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் நேற்றிரவு மீண்டும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின், தாங்கள் போராட்டத்தை ஒத்திவைப்பதாகக் கூறிய மருத்துவர்கள் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனைத் தடுக்கும் பொருட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பாவிடில் அவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டால் அவர்கள் பணி மூப்பை இழக்க நேரிடும். இதனால் அரசின் எச்சரிக்கையை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.