×

புதிய மாவட்டம் தென்காசி ! என்னென்ன தாலுகா இடம்பெறும் ?

தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை புதிய மாவட்டமாக செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை புதிய மாவட்டமாக செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் நிர்வாக வசதிகளுக்காக
 

தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை புதிய மாவட்டமாக செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை புதிய மாவட்டமாக செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் நிர்வாக வசதிகளுக்காக திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தென்காசி மாவட்டத்திற்கான  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடம் தேர்வு செய்யும் பணி, மாவட்டஆட்சியர் மற்றும் ஆணையர் அறிவிப்பு ஆகியவை நடைபெற்றது. இந்நிலையில் தென்காசியை புதிய மாவட்டமாக தமிழக அரசு அறிவித்ததற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார், சிவகிரி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம் என 6 தாலுகாக்கள் இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக அருண்சுந்தர் தயாளன் பணியாற்றுவார் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.