×

பிரதோஷத்திற்கு செய்து சதுரகிரியில் சிக்கி கொண்ட பக்தர்கள்!

மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் சிரமம் பாராமல் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று சனி பிரதோஷம் என்பதால் பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். இதனிடையே அங்கு பெய்த
 

மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில்  சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது

நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில்  சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் சிரமம் பாராமல் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று சனி பிரதோஷம் என்பதால் பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். இதனிடையே அங்கு பெய்த  கனமழை காரணமாக ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 200ற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையிலிருந்து இறங்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து அவர்கள் மலைக்கோயிலில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டனர். பின்பு இதுகுறித்த தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

ஏற்கனவே இங்கு 1977 மற்றும் கடந்த கடந்த 2015 இல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.