×

பிரதமர் மோடியும், முதல்வர் பழனிசாமியும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை!

ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், தியேட்டர், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் என அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்து மற்றும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களின் மூலமாகவே
 

ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், தியேட்டர், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் என அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்து மற்றும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களின் மூலமாகவே கொரோனா அதிகமாக பரவுவதால் அவர்கள் தங்களை தனிமைபடுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  மேலும், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உடனடியாக தெரிய வராது என்பதால் அவர்களை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

இரண்டு நாட்களுக்கு முன்னர் மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். அதே போல, வங்கிகள் வட்டி வாங்க கூடாது என்றும் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறினார். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, மருத்துவ சிகிச்சை மற்றும் ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார்.