×

பிரதமர் மோடி பற்றி அவதூறு வீடியோ.. வாட்ஸ் ஆப்பில் பரவியதால் மூவர் கைது!

அத்தகைய இழப்பு இந்தியாவுக்கு வரக் கூடாது என மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிக வளர்ச்சியடைந்த நாடுகள் தோல்வி அடைந்துள்ளதால், அத்தகைய இழப்பு இந்தியாவுக்கு வரக் கூடாது என மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் பலர் பிரதமர் மோடியை
 

அத்தகைய இழப்பு இந்தியாவுக்கு வரக் கூடாது என மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிக வளர்ச்சியடைந்த நாடுகள் தோல்வி அடைந்துள்ளதால், அத்தகைய இழப்பு இந்தியாவுக்கு வரக் கூடாது என மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் பலர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசி, வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக எஸ்.பி பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வீடியோவில் பேசிய அந்த மூன்று பேரும்  பாசிபட்டினத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து,  சீனி (47), இப்ராகிம்(43), மற்றும்  நைனார் பாத்திமா(46) ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.