×

பிகில், கைதி படங்களுக்கு சிறப்புக் காட்சி ஒளிபரப்பினால் திரையரங்கிற்கு சீல் – வட்டாட்சியர் எச்சரிக்கை

அரசு அனுமதியை மீறி சிறப்புக்காட்சி போடக்கூடாது, நாளை வெளியாகும் பிகில், கைதி படங்களுக்கு சிறப்புக் காட்சி ஒளிபரப்பினால் திரையரங்கிற்கு சீல் வைக்கப்படும் என திருத்தணி வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு அனுமதியை மீறி சிறப்புக்காட்சி போடக்கூடாது, நாளை வெளியாகும் பிகில், கைதி படங்களுக்கு சிறப்புக் காட்சி ஒளிபரப்பினால் திரையரங்கிற்கு சீல் வைக்கப்படும் என திருத்தணி வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜய் – இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள
 

அரசு அனுமதியை மீறி சிறப்புக்காட்சி போடக்கூடாது, நாளை வெளியாகும் பிகில், கைதி படங்களுக்கு சிறப்புக் காட்சி ஒளிபரப்பினால் திரையரங்கிற்கு சீல் வைக்கப்படும் என திருத்தணி வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அரசு அனுமதியை மீறி சிறப்புக்காட்சி போடக்கூடாது, நாளை வெளியாகும் பிகில், கைதி படங்களுக்கு சிறப்புக் காட்சி ஒளிபரப்பினால் திரையரங்கிற்கு சீல் வைக்கப்படும் என திருத்தணி வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு  ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 

 

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிகில் மற்றும் கைதி படங்களுக்கு சிறப்பு காட்சிகள் ரத்துக்கோரி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டதாக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 

இந்நிலையில் திருத்தணி திரையரங்கம் ஒன்றில், பிகில் படத்திற்கு காலை 7 மணி காட்சி ஒளிபரப்ப டிக்கெட் விற்கப்பட்டதாக வட்டாச்சியருக்கு தகவல் வந்தது. இதையடுத்து  அரசு அனுமதியை மீறி சிறப்புக்காட்சி போடக்கூடாது, நாளை வெளியாகும் பிகில், கைதி படங்களுக்கு சிறப்புக் காட்சி ஒளிபரப்பினால் திரையரங்கிற்கு சீல் வைக்கப்படும் என திருத்தணி வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.