×

பி.வி. சிந்துவை தூக்கி வந்து திருமணம் செய்வேன்: 70 வயது முதியவரின் விபரீத ஆசை!

70 வயதான முதியவர் மலைச்சாமி என்பவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறி வருகிறார். கமுதி: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை தூக்கிவந்து திருமணம் செய்யப்போவதாக முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தவர் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. இவரை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள விரதகுளம் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான முதியவர் மலைச்சாமி என்பவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக்
 

70 வயதான முதியவர் மலைச்சாமி என்பவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறி வருகிறார். 

கமுதி: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை தூக்கிவந்து திருமணம் செய்யப்போவதாக முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தவர்  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. இவரை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள விரதகுளம் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான முதியவர் மலைச்சாமி என்பவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறி வருகிறார். 

மலைச்சாமி, பி.வி சிந்துவின் புகைப்படத்துடன் மனு ஒன்று அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது தனக்கு  16 வயதே ஆகிறது, நாட்டில் உள்ள தீமைகளை அழிப்பதற்காக முதியவர் அவதாரம் எடுத்துள்ளேன் என்று கூறியதுடன்  பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை தூக்கிவந்து திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்’ என்று கூறி மனுவை அளித்தார். இதைக் கண்ட மாவட்ட ஆட்சியர் செய்வதறியாது திகைத்துப் போனார்.