×

பாரப்பா ஊரினிலே பல கடையுண்டு யாரப்பா அங்கெல்லாம் துணி வாங்குவார்? கமல்ஹாசனின் ட்விட்டர் ஐடியில் பூந்து விளையாடும் விஷமிகள்…

பாரப்பா ஊரினிலே பல கடையுண்டு யாரப்பா அங்கெல்லாம் துணி வாங்குவார்? காரப்பா சில்க்கினிலே புடவை வாங்கு ஜோரப்பா விலையும் தரமும்… என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டது போன்ற போலியான ஐடியில் போட்டோஷாப் செய்து பரப்பி வருகின்றனர். பாரப்பா ஊரினிலே பல கடையுண்டு யாரப்பா அங்கெல்லாம் துணி வாங்குவார்? காரப்பா சில்க்கினிலே புடவை வாங்கு ஜோரப்பா விலையும் தரமும்… என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டது போன்ற போலியான
 

பாரப்பா ஊரினிலே பல கடையுண்டு யாரப்பா அங்கெல்லாம் துணி வாங்குவார்? காரப்பா சில்க்கினிலே புடவை வாங்கு ஜோரப்பா விலையும் தரமும்… என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டது போன்ற போலியான ஐடியில் போட்டோஷாப் செய்து பரப்பி வருகின்றனர். 

பாரப்பா ஊரினிலே பல கடையுண்டு யாரப்பா அங்கெல்லாம் துணி வாங்குவார்? காரப்பா சில்க்கினிலே புடவை வாங்கு ஜோரப்பா விலையும் தரமும்… என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டது போன்ற போலியான ஐடியில் போட்டோஷாப் செய்து பரப்பி வருகின்றனர். 

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ கடந்த சில தினங்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்களின் புகைப்படங்களை பயன்படுத்து போட்டோஷாப் செய்து அவரது ட்விட்டர் பதிவு போலவும், தொலைக்காட்சி பிரபலங்கள் சிலருடன் உணவு உண்ணுவது போலவும், சீன பிரதமருக்கு கவிதை எழுதியது போலவும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இவையனைத்தும் பொய்யான தகவல்கள்.

எங்களின் கட்சி தலைவரின் பிரபலத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே விஷமப் பிரச்சாரத்தினை செய்யும்  சிலரின் இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கப்படத்தக்கது. 

இனி இது போன்ற பொய்யான, தவறான  விஷமத்தனமான செய்திகளை பரப்புகிறவர்கள் உடனடியாக நிறுத்திவிட வேன்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்துகின்றோம். 

நமது கட்சியின் சமூக வலைதளம் தொண்டர்கள் இதுபோன்ற விஷமப் பிரச்சாரங்கள் மீது விழிப்புடன் இருந்து அவை குறித்த தகவல்களை தலைமைக்கு அனுப்புவதோடு, மேலும் இது போன்ற பொய்ப் பிரச்சாரக்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.