×

பாடல் பெற்ற தலங்கள் வரிசை-5 : திருநல்லூர் பெருமணம்

இந்தத் தலத்தில் தான்,திருமால் இறைவனை வணங்கி அவுணர்களை வெல்ல வரம் பெற்றார். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் போது கொள்ளிடம் பாலம் வரும்.பாலம் கடந்தால் கொள்ளிடம் ஊர் வரும் அங்கிருந்து பிரியும் கிளைச் சாலையில் 5 கிலோ மீட்டர் சென்றால் ஆச்சாள் புரம் வருகிறது. இந்த ஊரின் பழம் பெயர் திருநல்லூர் பெருமணம். இந்தத் தலத்தில் தான்,திருமால் இறைவனை வணங்கி அவுணர்களை வெல்ல வரம் பெற்றார். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் போது கொள்ளிடம் பாலம் வரும்.பாலம்
 

இந்தத் தலத்தில் தான்,திருமால் இறைவனை வணங்கி அவுணர்களை வெல்ல வரம் பெற்றார். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் போது கொள்ளிடம் பாலம் வரும்.பாலம் கடந்தால் கொள்ளிடம் ஊர் வரும் அங்கிருந்து பிரியும் கிளைச் சாலையில் 5 கிலோ மீட்டர் சென்றால் ஆச்சாள் புரம் வருகிறது. இந்த ஊரின் பழம் பெயர் திருநல்லூர் பெருமணம்.

இந்தத் தலத்தில் தான்,திருமால் இறைவனை வணங்கி அவுணர்களை வெல்ல வரம் பெற்றார். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் போது கொள்ளிடம் பாலம் வரும்.பாலம் கடந்தால் கொள்ளிடம் ஊர் வரும் அங்கிருந்து பிரியும் கிளைச் சாலையில் 5 கிலோ மீட்டர் சென்றால் ஆச்சாள் புரம் வருகிறது. இந்த ஊரின் பழம் பெயர் திருநல்லூர் பெருமணம்.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், 50 அடி உயர ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் அமைந்திருக்கிறது கோவில். மூலவ மூலவர் சுயம்புலிங்கமான அருள்மிகு சிவலோகதியாகர் கிழக்கு நோக்கியும், அம்மை திருவெண்ணீற்றுமை தெற்கு நோக்கியும் கோவில் கொண்டுள்ளனர்.கோவில் கல்வெட்டுக்களில் இறைவியின் பெயர் சொக்கியார் என்று குறிப்பிடப் படுகிறது.தலமரம் – மாமரம். தீர்த்தம் – பஞ்சாக்கர தீர்த்தம்.

இது தவிர பிருகு,அசுவ,வசிஷ்ட,அத்திரி,சமதக்னி,வியாச,மிருகண்டு தீர்தங்களுமுண்டு.இதலத்திற்கு,திருநல்லூர் பெருமனம், சிவலோகபுரம், திருமணவை,எனவும் பெயர்களுண்டு.

திருஞான சம்பந்தர் திருமணம் இங்கு நடைபெற்ற போது அம்பிகை இங்குள்ள பஞ்சாக்கர தீர்த்த கரையில் நின்று அனைவருக்கும் வெண்ணீறளித்து வரவேற்றாளாம்.அதனால்தான் அவளுக்கு வெண்ணீற்று உமை என்ற திருநாமம் ஏற்பட்டது.திருமணம் முடிந்த உடன் இறைவன் கோவிலில் ஜோதிவடிவான ஒரு வாயிலைக் காட்டினாராம்.சிலர் நெருப்பை கண்டு அஞ்ச திருஞான சம்பந்தர் நமச்சிவாய மந்திரத்தின் மகிமையை எடுத்துச் சொல்லி தன் உற்றார் உறவினர்களுடன் அந்த ஜோதியில் கலந்து இறைவனடி சேர்ந்தாராம்.

அன்று அவருடன் திருநீலக்க நாயனார்,முருகநாயனார்,திரு நீலகண்ட யாழ்பாணர், சிவபாத இருதயர்,நம்பியாண்டார் நம்பி ஆகிய சிவனடியாரும் அன்று இங்கு தீயுட்புகுந்து,முக்தி பெற்ற ஸ்தலம் இது.ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மூல தினத்தில் இத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இதுதவிர,பல்வேறு சிறப்புக்கள் கொண்ட தலம் இது. முருகப்பெருமானுக்கு இறைவன் அருளியதலம் இது.இந்தத் தலத்தில்தான்,திருமால் இறைவனை வணங்கி அவுணர்களை வெல்ல வரம் பெற்றார். காகமுனிவர் இந்தத் தலத்தை காலால் மிதிக்க அஞ்சி,தலையாலேயே நடந்து வந்து வணங்கி முக்தி பெற்ற தலமிது.

கோவிலின் தலபுராணம் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்,மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோர் எழுதி இருக்கிறார்கள்.இந்தக் கோவிலில் மொத்தம் 19 கல்வெட்டுகள் உள்ளன.அந்தக் கல்வெட்டுக்கள் இந்தத் தலத்தை, வட்கரை இராசதிராச வளநாட்டு வெண்ணக்யூர் நாட்டு பஞ்சமன் மாதேவியான குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலத்து திருமணம் என்று குறிப்பிடுகின்றன.
ஆறுகால பூஜை நடைபெறுகிறது.இக்கோவில் திருக்கைலாய பரம்பரை தரும ஆதீனத்தின் பொறுப்பில் உள்ளது.