×

பழனி : லண்டனுக்கு செல்லும் 20 லட்சம் மதிப்பிலான தங்க ஆசனம்!

லண்டன் தான்தோன்றி ஆஞ்சநேயர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக,ரூ.20 லட்சம் மதிப்பில் தங்க ஆசனம் மற்றும் முருகன் பாதங்கள் பழனியில் செய்யப்பட்டு இன்று சென்னை வழியே லண்டன் மாநகருக்கு கொண்டுசெல்லப்படுகிறது. உலகநாடுகள் அனைத்திலும் நம் தமிழர்கள் தொழில் நிமிர்த்தமாக சென்று அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை தற்பொழுது பரவலாக ஏற்பட்டுள்ளது.இவ்வாரான சூழ்நிலையில் நம்முடைய கலாச்சாரத்தினையும் அதன் முக்கியதுவங்களையும் அந்தந்த நாடுகளிலும் நாம் மெய்ப்பிக்கும் விதமாக அந்த நாடுகளிலும் கோவில்களை நிறுவி நம்முடைய வழிபாடுகளை தொடர்ந்து வருகின்றனர் நம்முடைய தமிழ் மக்கள்.
 

லண்டன் தான்தோன்றி ஆஞ்சநேயர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக,ரூ.20 லட்சம் மதிப்பில் தங்க ஆசனம் மற்றும் முருகன் பாதங்கள் பழனியில் செய்யப்பட்டு இன்று சென்னை வழியே லண்டன் மாநகருக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

உலகநாடுகள் அனைத்திலும் நம் தமிழர்கள் தொழில் நிமிர்த்தமாக சென்று அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை தற்பொழுது பரவலாக ஏற்பட்டுள்ளது.இவ்வாரான சூழ்நிலையில் நம்முடைய கலாச்சாரத்தினையும் அதன் முக்கியதுவங்களையும் அந்தந்த நாடுகளிலும் நாம் மெய்ப்பிக்கும் விதமாக அந்த நாடுகளிலும் கோவில்களை நிறுவி நம்முடைய வழிபாடுகளை தொடர்ந்து வருகின்றனர் நம்முடைய தமிழ் மக்கள். 

அதன் தொடர்ச்சியாக லண்டன் வேல்ஸ் நகரில் புதிதாக தான்தோன்றி ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. அங்கு பிரதிஷ்டை செய்வதற்காக, ரூ.20 லட்சம் மதிப்பில் தங்க ஆசனம் மற்றும் முருகன் பாதங்கள் பழனியில் செய்யப்பட்டன.இந்தநிலையில் லண்டனை சேர்ந்த கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் நேற்று பழனிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் பழனி ஐவர்மலை முருகன் கோவில்,பழனி மலைக்கோவில் ஆகியவற்றுக்கு தங்க ஆசனம், பாதங்கள் எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பிறகு ஆசனம், பாதங்களை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏற்றி கிரிவீதியில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

இன்று  பாதம் மற்றும் ஆசனம் கார் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது. அதன்பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் லண்டனுக்கு கொண்டு செல்லப்படுகிறது.