×

பள்ளிகளில் ‘ஸ்பெஷல் கிளாஸ்’ நடத்த கூடாது – பள்ளிக்கல்வி இயக்ககம் எச்சரிக்கை

சிறப்பு வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது. சென்னை: சிறப்பு வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுக்க அனைத்து பள்ளி மற்றும்
 

சிறப்பு வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.

சென்னை: சிறப்பு வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை அறிவித்தன. இதனால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு கெட்டுபோகும் என்று பெற்றோர்கள் வருந்தினாலும், இது மாணவர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், கொரானோ வைரஸ் எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.