×

பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்கள் ரத்து!

அதே சமயம் வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது வழக்குபதிவும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே தேவையின்றி சுற்றி திரிய வேண்டாம் என்று போலீசார் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே சமயம் வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது வழக்குபதிவும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.
 

அதே சமயம் வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது வழக்குபதிவும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.  

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே தேவையின்றி சுற்றி திரிய வேண்டாம் என்று போலீசார் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே சமயம் வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது வழக்குபதிவும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.  

இந்நிலையில் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் வடிவமைத்துள்ள இந்த முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடந்தது. அப்போது அதில் கலந்துகொண்ட போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் , “கொரோனா நிவாரண பொருட்களை வழங்குவதற்கு தன்னார்வலர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித தடையும் இல்லை. அதை வழங்கும் வழிமுறைகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், ” சென்னையில் ஊரடங்கை மீறியதற்காக 49 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதில் 23 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களை ஓட்டிச்சென்றவர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்கள் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். அதனால் தேவையில்லாமல் வாகனங்களில் செல்வதை தவிருங்கள் . பொருட்கள் வாங்க செல்வோர், அருகில் உள்ள கடைகளில் நடந்து சென்று வாங்குங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.