×

பயணிகள் உயிருக்கு உத்தரவாதம் தந்துவிட்டு உயிர்விட்ட ஓட்டுநர் !

அபாயகரமான ஆற்றுப்பாலத்தை கடக்கும்போது ஏற்பட்ட நெஞ்சுவலியை பொருட்படுத்தாமல் பயணிகளுடன் ஆற்றை கடந்துவிட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் பூவாளுரை சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் திருக்குமரன். இவர் திண்ணியம் கிராமத்தில் இருந்து லால்குடி வழியே திருச்சிக்கு பேருந்து ஓட்டிக் கொண்டு சென்றார். அபாயகரமான ஆற்றுப்பாலத்தை கடக்கும்போது ஏற்பட்ட நெஞ்சுவலியை பொருட்படுத்தாமல் பயணிகளுடன் ஆற்றை கடந்துவிட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் பூவாளுரை சேர்ந்த அரசுப் பேருந்து
 

அபாயகரமான ஆற்றுப்பாலத்தை கடக்கும்போது ஏற்பட்ட நெஞ்சுவலியை பொருட்படுத்தாமல் பயணிகளுடன் ஆற்றை கடந்துவிட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் பூவாளுரை சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் திருக்குமரன். இவர் திண்ணியம் கிராமத்தில் இருந்து லால்குடி வழியே திருச்சிக்கு பேருந்து ஓட்டிக் கொண்டு சென்றார்.

அபாயகரமான ஆற்றுப்பாலத்தை கடக்கும்போது ஏற்பட்ட நெஞ்சுவலியை பொருட்படுத்தாமல் பயணிகளுடன் ஆற்றை கடந்துவிட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் பூவாளுரை சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் திருக்குமரன். இவர் திண்ணியம் கிராமத்தில் இருந்து லால்குடி வழியே திருச்சிக்கு பேருந்து ஓட்டிக் கொண்டு சென்றார். ,தீபாவளி சமயம் என்பதால் மற்ற பேருந்துகளை போலவே திருக்குமரன் பேருந்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இவர் ஓட்டிச் சென்ற பேருந்து சிறுமையம்குடி அருகே உள்ள ஆற்றுப் பாலத்தை கடந்து கொண்டிருந்தபோது திருக்குமரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறுமையம்குடி ஆற்றுப்பாலம் சற்று அபாயகரமான பாலம்தான். ஏற்கனவே இங்கு பல விபத்துகள் நடைபெற்றுள்ளது. 

ஆற்றுப் பாலத்தை கடக்கும்போது நெஞ்ச வலி ஏற்பட்டதால் துடிதுடித்த ஓட்டுநர் திருக்குமரன் நமக்கு எது ஆனாலும் பயணிகளுக்கு எதுவும் ஆகக் கூடாது என ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டும், மற்றொரு கையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டும் பேருந்தை பத்திரமாக ஓட்டி ஆற்றைக் கடந்து நிறுத்தினார். பின்னர் தனக்கு நெஞ்சுவலி என பயணிகளிடம் கூறினார். பின்னர் பயணிகள் கொடுத்த தண்ணீரை குடித்து விட்டு மயங்கிவிட்டார். உடனடியாக அவர் சிறுகுடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார் திருக்குமரன். இதை கேள்விபட்டு மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி, மக்கள், உறவினர் உடலை பார்த்து கதறி அழுதனர. எல்லாரையும் காப்பாற்றிவிட்டு எங்களை தவிக்க விட்டீங்களே என மகள்கள் கூறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.