×

நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்!

நெல்லை நேதாஜி மார்க்கெட்டை முன்னறிவிப்பு இல்லாமல் செப் 15 க்குள் காலி செய்ய உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை : நெல்லை நேதாஜி மார்க்கெட்டை முன்னறிவிப்பு இல்லாமல் செப் 15 க்குள் காலி செய்ய உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.79½ கோடியில் விரிவாக்கம்
 

நெல்லை  நேதாஜி  மார்க்கெட்டை முன்னறிவிப்பு இல்லாமல்  செப் 15 க்குள் காலி செய்ய உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வியாபாரிகள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நெல்லை : நெல்லை  நேதாஜி  மார்க்கெட்டை முன்னறிவிப்பு இல்லாமல்  செப் 15 க்குள் காலி செய்ய உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வியாபாரிகள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.79½ கோடியில் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதேபோல் சுமார் 150-க்கும் மேற்பட்ட காய்கறிகள்  கடைகள் உள்ள நெல்லை டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட் நவீனமயமாக்கப்படுகிறது. இதன் காரணமாகக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் முதற்கட்டமாகக் கடை உரிமையாளர்களுக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில்  செப்டம்பர் 15-க்குள் கடைகளை கேலிசெய்ய மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில்  நேதாஜி போஸ் மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை 
மாநகராட்சி மாற்று இடம் வழங்காமலும் முன்னறிவிப்பு செய்யாமலும் செப்டம்பர் 15 க்குள் கடைகளை  காலி செய்ய உத்தரவிட்டுள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வியாபாரிகள்  உள்ளிருப்பு உண்ணாவிரதம் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.