×

நெய்வேலி என்எல்சி ஆலைக்குப் பயன்படுத்தும் எரிபொருளில் கலப்படம்..!

கடலூர் மாவட்டத்தில் உள்ள, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதற்கு இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திலிருந்து பர்னஸ் எனப்படும் எரிபொருள் ஆயில் வழக்கமாகக் கொண்டு வரப்படும். அந்த எரிபொருளில் கலப்படம் இருந்ததாகத் தகவல்கள் கிடைத்ததையடுத்து என்.எல்.சி விஜிலென்ஸ் துறையினர் பர்னஸ் எரிபொருள் கொண்டு வரப்பட்ட லாரியில் திடீரென தீவிர சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திடம் இருந்து
 

கடலூர் மாவட்டத்தில் உள்ள, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதற்கு இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திலிருந்து பர்னஸ் எனப்படும் எரிபொருள் ஆயில் வழக்கமாகக் கொண்டு வரப்படும். அந்த எரிபொருளில் கலப்படம் இருந்ததாகத் தகவல்கள் கிடைத்ததையடுத்து என்.எல்.சி விஜிலென்ஸ் துறையினர் பர்னஸ் எரிபொருள் கொண்டு வரப்பட்ட லாரியில் திடீரென தீவிர சோதனை மேற்கொண்டனர். 

அச்சோதனையில், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திடம் இருந்து கொண்டு வரப்பட்ட பர்னஸ் எரிபொருளில் பாதிக்குப் பாதி தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, லாரி ஓட்டுநர் மற்றும் லாரி கிளீனர் இருவரையும் விஜிலென்ஸ் துறையினர் கைது செய்தனர். இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திலேயே கலப்படம் நடந்ததா அல்லது கொண்டு வரப்பட்ட வழியில் பர்னஸ் ஆயிலில் கலப்படம் நடந்துள்ளதா என விஜிலென்ஸ் துறையினர் லாரி ஓட்டுநர் மட்டும் கிளீனரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.