×

நிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி… எப்படி வழிபட வேண்டும்?

குழந்தைப் பருவ இறைவனாக மனமுருகி வழிபடப்படுவதில் முதலிடம் கிருஷ்ணனுக்குத் தான். இந்த கிருஷ்ணனின் அவதார தினம் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு கூடிய ரோகிணியில் நிகழ்ந்தது. இதனால் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு கூடிய ரோகிணியில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியின் போது கிருஷ்ணனின் பால்ய பருவ குறும்புதனமான விளையாட்டுகள் மற்றும் சாகசங்கள் நினைவு கூறப்படுகின்றன. இன்று மாலை கிருஷ்ணனை மனதில் நினைத்து அவரவர் விரும்புகிற கிருஷ்ணர் பொம்மை, கிருஷ்ணர் படம் இப்படி எதை
 

குழந்தைப் பருவ இறைவனாக மனமுருகி வழிபடப்படுவதில் முதலிடம் கிருஷ்ணனுக்குத் தான். இந்த கிருஷ்ணனின் அவதார தினம் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு கூடிய ரோகிணியில் நிகழ்ந்தது. இதனால் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு கூடிய ரோகிணியில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியின் போது கிருஷ்ணனின் பால்ய பருவ குறும்புதனமான விளையாட்டுகள் மற்றும் சாகசங்கள் நினைவு கூறப்படுகின்றன. இன்று மாலை கிருஷ்ணனை மனதில் நினைத்து அவரவர் விரும்புகிற கிருஷ்ணர் பொம்மை, கிருஷ்ணர் படம் இப்படி எதை வைத்து பூஜிக்க போகிறீர்களோ அதை எடுத்து சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் பொட்டு வைச்சு, துளசி மற்றும் பூ அலங்காரம் செய்து பூஜையறையில் ஒரு மனை போட்டு அதில் வைக்கவேண்டும்.

கண்ணன் பிறந்த போது கண் விழித்து இருந்தவங்க மூன்றே மூன்று பேர் தான் என்று விஷ்ணு புராணம் சொல்கிறது. பெற்றோரான வசுதேவர், தேவகி, இவர்களை தவிர விழிச்சிருந்த ஒரே ஒருத்தர், சந்திரன் மட்டுமே. அதனால கிருஷ்ண ஜெயந்தி பூஜையை மாலை நேரம் முடிஞ்சு இரவு தொடங்கி, நிலவு ஒளிரக் கூடிய நேரத்துல தான் செய்யணும்கறது பூஜை விதி. மாலை ஆறு மணிக்கு மேல் உங்களுக்கு சௌகரியமான நேரத்துல பூஜையை செய்யலாம். பூஜையை நிறைவு செய்கிற வரைக்கும் பால், மோர், பழரசம், பழங்கள் இந்த மாதிரியான ஆகாரத்தை கொஞ்சமா எடுத்துக்கறது நல்லது. இப்படி உபவாசமிருக்க முடியாதவங்க அரிசி சேர்க்காத ஆகாரம் கொஞ்சமா எடுத்துக்கலாம். மாலை நேரம் ஆரம்பம் ஆகும் சமயத்துலயே பால கிருஷ்ணரோட பாதச் சுவடுகளை, வாசல்ல இருந்து பூஜை அறை வரை உள்நோக்கி வர்ற மாதிரி அரிசி மாவால போட்டு வைச்சிடுங்க. இது உங்க வீட்டுக்கு கிருஷ்ணரை வரவேற்கிற மாதிரியானது. பூஜை செய்யத் தயாரானதும் கண்ணனை இருந்தியிருக்கிற மணைக்கு முன்னால், வாழை இலை ஒண்ணைப் போட்டு அதுக்கு நடுவுல கொஞ்சம் அரிசியைப் பரப்புங்க. ஒரு செம்பில் நீர் நிறைச்சு, அதுமேல மாவிலை செருகி, தேங்காய் வைச்சு கலசம் போல் அலங்கரியுங்க. வாழை இலையோட வலது புறத்துல விளக்கு ஒன்றை ஏற்றி வையுங்க. கொஞ்சம் மஞ்சள் பொடியை எடுத்த தண்ணீரில் குழைச்ச, விநாயகராப் பிடிச்சு வலது ஓத்துல வையுங்க. பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைச்சு, கொஞ்சம் பூப்போடுங்க. அதுக்கப்புறம், கலசத்துக்கும் கிருஷ்ணருக்கும் மாலை அல்லது பூச்சரம் சாத்துங்க. தடை ஏதும் இல்லாம பூஜை நிறைவேறவும், பலன் முழுமையாக கிடைக்கவும் பிள்ளையாரை வேண்டிக்கிட்டு பிடிச்சு வைச்ச பிள்ளையாருக்கு தூப, தீப, நைவேத்யம் காட்டுங்க. பிறகு கொஞ்சம் பூவும், துளசியும் எடுத்து, மாதவனே! எம்மனைக்கு மகிழ்வோடு எழுந்தருள்க! என்று வேண்டிக்கிட்டு, கலசம், கிருஷ்ணர் மேல கொஞ்ம் கொஞ்சம் போடுங்க.

இந்த மாதிரி செய்யறதுக்கு சமஸ்கிருதத்துல `ஆவாஹனம்’னு பேர். இதுக்கு, எழுந்தருள வேண்டுதல்னு அர்த்தம். அடுத்தது, அங்கபூஜை. அதாவது திருவடி முதல் திருமுடிவரை பூஜிக்கறது. கிருஷ்ணரை மனசுல நினைச்சுகிட்டு, “பாலகிருஷ்ணா போற்றி, உன் பாதங்களைப் பணிகிறேன். தாமோதரா போற்றி, நின்தாளினை வணங்குகிறேன்; இதயக் கமலவாசா போற்றி, உந்தன் இடுப்பினை பூஜிக்கிறேன்; நெடுமாலே போற்றி, உமது நெற்றியை வணங்குகிறேன்; நீலவண்ணா போற்றி, நிந்தன் நீள் கழுத்தினை வணங்குகிறேன்; முகுந்தனே போற்றி, உம் திருமகத்தினை வணங்குகிறேன்; அச்சுதா போற்றி, எந்தன் அகம் ஒன்றிப் பணிகின்றேன்’ அப்படின்னு சொல்லிகிட்டே அர்ச்சனை மாதிரி கொஞ்சம் பூபோடுங்க. அடுத்து, உங்களுக்கு தெரிஞ்ச கிருஷ்ணர் துதிகளைப் பாடுங்க. போற்றி துதிகள் தெரிஞ்சா சொல்லுங்க. இந்த சமயத்துல, குழந்தை பாக்யத்துக்காக காத்திருக்கறவங்க, பூஜை செய்யற கிருஷ்ணர் படம் அல்லது பொம்மையை மடி மீது வைத்துக் கொள்வதும் உண்டு. இப்படிச் செய்யறதால மழலைப் பேறு கிடைக்கும் என்பது ஐதிகம்.

கிருஷ்ணரை மடியில இருத்திக்கறவங்க, பூஜை முடிஞ்சதும் கொஞ்சம் பால் அல்லது பால்பாயசத்தை கிருஷ்ணருக்கு ஊட்டி விடற மாதிரி பாவனை செய்து விட்டு அந்தப் பிரசாதத்தை தம்பதியர் அருந்தணும்னு சொல்வாங்க. துதிகளைச் சொல்லி முடிச்ச பிறகு தூப, தீப, நைவேத்யம் காட்டுங்க. நிவேதனமா குழந்தைகளுக்கு பிடிச்ச சீடை, முறுக்கு, தட்டை, அப்பம், அதிரசம் இப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம். பழங்கள்ல நாவல் பழம், விளாம்பழம் இதெல்லாம் இருக்கலாம். இவை எல்லாம் இல்லைன்னாலும் ஒருதுளி வெண்ணெயும், ஒரு கைப்பிடி அவலும் இருந்தாலே போதும், கிருஷ்ணருக்கு ரொம்பவே பிடிக்கும் பின்னர் வெளியில வந்து நிலாவைப் பாருங்க. (நினைவுல வைச்சுக்குங்க. கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த சமயத்துல விழித்திருந்து தரிசனம் செஞ்ச மூணு பேர்ல சந்திரனும் ஒருவர். அப்படின்னா அவர் எவ்வளவு பெரிய பாக்யம் செய்திருக்கணும். அவரை நாம பார்க்கறது எத்தனை புண்ணியம்.

உள்ளே வந்து கிருஷ்ணர் முன்னால நின்னு உங்களை நீங்களே மூணு தடவை சுத்திக்கிட்டு, “சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’னு சொல்லிவிட்டு, கொஞ்சம் நீரை கிருஷ்ணருக்கு முன்னால விட்டுட்டு, நமஸ்காரம் பண்ணுங்க. பிறகு பூஜித்த கலசத்தை வடக்குப் பக்கமா கொஞ்சம் நகர்த்தி வையுங்க. இது பூஜையை நிறைவு செய்து கிருஷ்ணரை அவரோட இருப்பிடத்துக்கு வழி அனுப்பி வைப்பதாக ஐதிகம். நிவேதனம் செய்த பலகாரங்களை உங்க வீட்டுக் குட்டிக் கிருஷ்ணர், ராதைக்கு குடுங்க. அக்கம்பக்கத்து வீட்டுக் குட்டீஸ்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்க. பிறகு, விரதம் இருந்தவங்க சிறிது பிரசாதங்களையும் எளிய உணவையும் எடுத்துக்கலாம். கிருஷ்ண ஜெயந்தி தின விரதம் அவ்வளவு தான்.

ஆனா, அதோட நிறைவா, மறுநாள் ஏழை சிறுவர், சிறுமியரோட கல்வி, உணவு, உடை இப்படி உங்களால இயன்ற உதவியைச் செய்யுங்க. அந்த மாயக் கிருஷ்ணன் நிச்சயம் உங்க மனக்குறைகள் எல்லாவற்றையும் தீர்த்து வைச்சு, மகிழ்ச்சி நிறையச் செய்வான். கண்ணனுக்கு பிரியமான பால், வெண்ணெய் இனிப்பு சீடை, முறுக்கு, அதிரசம், அவல், சீடை, தட்டை, தேன்குழல், இனிப்பு வகைகள், பழங்கள் ஆகியவை வழிபாட்டின்போது படைக்கப்படுகின்றன. கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டில் விரதமுறை பின்பற்றப்படுகிறது. இவ்விரத முறையைப் பின்பற்றுவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு அழகான புத்திகூர்மையான குழந்தை பாக்கியம் கிட்டும். குழந்தைகளின் அறிவுத்திறமை மேம்படும். நற்சிந்தனைகள் வளரும்.