×

நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸிங் முறையில் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக கூட்டங்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா காலத்தில் தி.மு.க செயல்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (மே 16) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு எனது தலைமையில் காணொலி காட்சி
 

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸிங் முறையில் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கூட்டங்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா காலத்தில் தி.மு.க செயல்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (மே 16) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு எனது தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.