×

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ? ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன?

பொதுவாக நாலு பேரு நாலு விதமாக பேசுவார்கள் என்று நம்மூரில் பேசுவது உண்டு. அப்படி என்ன பேசுவார்கள்? பக்தர்கள் இருக்காங்களே அவங்க மொத்தம் நாலு பிரிவா இருக்காங்களாம். ஆர்த்தன், ஜிக்யாசூ, அர்த்தார்த்தி, ஞானி இவங்க்களுக்கு பேரு வச்சிருக்காரு ஸ்ரீ க்ரிஷ்ணர் . இதுல ஆர்த்தன் சொல்லப்படறவங்க… அவங்களுக்கு பிரச்சனை வந்தாத்தன் கடவுள் ஞாபகம் வரும். உடல் ஆரோக்கியம், வாழ்க்கை பிரச்சனைனா சாமிக்கு வேண்டுதல் செஞ்சுட்டு அவங்க பிரச்சனை தீர்த்ததும் திருப்தி அடைஞ்சுட்டு அடுத்த பிரச்சனை வரும் வரை
 

பொதுவாக நாலு பேரு நாலு விதமாக பேசுவார்கள் என்று நம்மூரில் பேசுவது உண்டு. அப்படி என்ன பேசுவார்கள்?

பக்தர்கள் இருக்காங்களே அவங்க மொத்தம் நாலு பிரிவா இருக்காங்களாம். ஆர்த்தன், ஜிக்யாசூ, அர்த்தார்த்தி, ஞானி இவங்க்களுக்கு பேரு வச்சிருக்காரு ஸ்ரீ க்ரிஷ்ணர் .

இதுல ஆர்த்தன் சொல்லப்படறவங்க… அவங்களுக்கு பிரச்சனை வந்தாத்தன் கடவுள் ஞாபகம் வரும். உடல் ஆரோக்கியம், வாழ்க்கை பிரச்சனைனா சாமிக்கு வேண்டுதல் செஞ்சுட்டு அவங்க பிரச்சனை தீர்த்ததும் திருப்தி அடைஞ்சுட்டு அடுத்த பிரச்சனை வரும் வரை சாமியை மறந்துடுவாங்க

அர்த்தார்தி சொல்லப்படறவங்க… தனக்கு கடவுள் இதை கொடுக்கனும் அதை கொடுக்கனும். சாமி நம்மை நல்லா காப்பாத்தனும்னு சொல்லி அவருக்கு எப்பவும் ப்ரார்த்தனையும் ஆராதனைகளையும் செய்யறவங்க. இவங்க வாழ்க்கை சந்தோஷத்தை மட்டுமே கடவுள் பார்த்துகிட்ட இவங்களுக்கு போதும்.

 ஜிக்யாசூனு சொல்லப்பட்றவங்க … இப்படி வாழ்க்கை பிரச்சனையை பத்தி கேட்காம.. கடவுளே எனக்கு நல்ல ஞானத்தை கொடு.. ஆன்மீக எண்ணத்துடன் இருக்கவை…. இதை எல்லாம் காட்டும் குருவை எனக்கு அருள்னு வேண்டுவாங்க. இயல்பு வாழ்க்கையை கடந்த வேண்டுதல் அவங்களோடது.

கடைசியா ஞானி …. இவங்க எதையும் வேண்டுவதில்லையாம். அவங்க கடவுளை தெரிஞ்சுகிட்டவங்க. கடவுள் எதையாவது கொடுக்கறேன்னு சொன்னாலும் நீங்களே என்னோட இருக்கும் பொழுது வேற என்ன வேணும். உங்க புகழை வேணா எல்லாருக்கும் எடுத்து சொல்றேன்னு…. கடவுளுக்கே வரம் கொடுப்பாங்கலாம்.

எந்த நிலையில் பக்தன் இருந்தாலும் அவனை கொஞ்சம் கொஞ்சமா அடுத்த அடுத்த நிலைக்கு நான் கூட்டிகிட்டு போயிடுவேன்னு சொல்றார் ஸ்ரீக்ருஷ்ணர். அனைவரும் எனக்கு சமமானவங்க தான். ஆனா ஞானியை மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் அவன் என் கிட்ட எதையும் எதிர்பார்க்கறது இல்லைனு சொல்றார்.

இந்த நாலு பேரு தான் நாலு விதமா பேசுவாங்க கடவுள் கிட்ட…. அதனால இதையே பழமொழியா மாறி வந்திருக்கலாம். 

Courtesy : Scientific Astrologer S.MADHUSUDHANAN, MBA, M.Phil(Mgt), D.Astro.,