×

நாமக்கல்லில் இடிந்து விழுந்த அரசுப்பள்ளியின் மேற்கூரை…!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் திருச்சி மாவட்டம், சிங்களா புரத்தில் உள்ள அரசுப் பள்ளியின் மேற்கூரை சேதமடைந்தால் மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் ஒழுகுகிறது என்றும் இதனால் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில்
 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 
சில நாட்களுக்கு முன்னர் திருச்சி மாவட்டம், சிங்களா புரத்தில் உள்ள அரசுப் பள்ளியின் மேற்கூரை சேதமடைந்தால் மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் ஒழுகுகிறது என்றும் இதனால் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். 

இதனையடுத்து, இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள அரசுப்பள்ளியின் கான்கிரீட் மேற்கூரை மழையில் நன்கு ஊறியிருந்துள்ளது. இன்று காலை திடீரென பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது அதிகாலை என்பதால் மாணவர்கள் யாரும் வகுப்பறையினுள் இல்லை. இதில், வகுப்பறையில் இருந்த மேசைகள், பலகைகள், உட்காரும் மேசை, அலமாரி என அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளன. 

இது குறித்து அப்பகுதி மக்கள், மாணவர்கள் உள்ளே இருந்திருந்தால் பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கக் கூடும் என்பதால் பள்ளியின் கட்டிடங்களை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வகுப்பறையினுள் பாடம் நடத்த முடியாததால் ஆசிரியர்கள் மரத்தடியில் வைத்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளிகளின் இந்த நிலை மாறி, மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே பல மக்களின் விருப்பமாக உள்ளது.