×

நாக்பூரிலிருந்து நடந்தே வந்த நாமக்கல் இளைஞர் வழியிலேயே பரிதாப பலி!

கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வரும் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வரும் 14
 

கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.  இதனால் வரும் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 673  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.  இதனால் வரும் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் நாக்பூரில்  நாமக்கலைச் சேர்ந்த லோகேஷ் சுப்ரமணி என்ற 23 வயது இளைஞர் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து ஊரடங்கால் பேருந்துகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தடையை மீறி சொந்த ஊருக்கு திரும்ப  500 கி.மீ தூரம் நடந்துவருவதற்கு முடிவு செய்து, சக தொழிலாளர்களுடன் இணைந்து நடந்துவந்துள்ளார்.  கடந்த 3 நாட்களாக நடந்து வந்த இவர்களுக்கு வழியில் சிலர் உணவு கொடுத்துள்ளார். 

இருப்பினும் இவர்கள் தெலங்கானா மாநிலம் செகந்திரபாத் வந்த நிலையில் லோகேஷ் சுப்ரமணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஊரடங்கு உத்தரவால் தமிழக தொழிலாளி பலியான சம்பவம் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.