×

தொடரும் மருத்துவர்களின் போராட்டம் : தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..!

மொத்தமாகத் தமிழகம் முழுவதிலும் உள்ள 500 மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 25 ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 7 ஆவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்திற்கு ஒரு தீர்வு காண, இன்று மதியம் 2 மணிக்குள் அரசு மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிடில் அவர்களின் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்
 

மொத்தமாகத் தமிழகம் முழுவதிலும் உள்ள 500 மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 25 ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 7 ஆவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்திற்கு ஒரு தீர்வு காண, இன்று மதியம் 2 மணிக்குள் அரசு மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிடில் அவர்களின் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப் படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரிக்கை விடுத்தார். 

அதனையும் மீறி, போராட்டம் நடைபெற்று வருவதால் தமிழக அரசு மாவட்டந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்துள்ளது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 50 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாகத் தமிழகம் முழுவதிலும் உள்ள 500 மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.