×

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு: வருத்தம் தெரிவித்தார் எஸ்.வி சேகர்!

தேசியக் கொடியை அவமதித்து பேசியதற்கு எஸ்.வி சேகர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கைக்கு முதல்வர் பழனிசாமி உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட பாஜகவின் எஸ்வி சேகர், தேசிய கோடியை அவமதிக்கும் விதமாகவும் முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையத்தில் எஸ்வி சேகருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த
 

தேசியக் கொடியை அவமதித்து பேசியதற்கு எஸ்.வி சேகர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கைக்கு முதல்வர் பழனிசாமி உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட பாஜகவின் எஸ்வி சேகர், தேசிய கோடியை அவமதிக்கும் விதமாகவும் முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையத்தில் எஸ்வி சேகருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்ற பிரிவு போலீசார் எஸ்வி சேகரிடம் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, தேசிய கொடியை அவமதித்ததற்கு எஸ்வி சேகர் மன்னிப்பு கேட்டால் அவரை கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் தேசிய கொடியை அவமதித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் விதமாக பேச மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து, செப்.7 வரை எஸ்வி சேகரை கைது செய்யக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.