×

துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரத்திருமகன் பழனியின் உடல் நல்லடக்கம்…!

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்றுமுன்தினம் இரவு இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு படை வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். உயிரிழந்த அந்த 2 படை வீரர்களுள் ஒருவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி ஆவார். இதையடுத்து வீரமரணம் அடைந்த பழனியின் உடல் இன்று இரவு ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரின் சொந்த ஊரான ராமநாதபுரம்
 

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்றுமுன்தினம் இரவு இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு படை வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். உயிரிழந்த அந்த 2 படை வீரர்களுள் ஒருவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி ஆவார்.

இதையடுத்து வீரமரணம் அடைந்த பழனியின் உடல் இன்று இரவு ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூருக்கு எடுத்து செல்லபட்ட உடலுக்கு குடும்பத்தினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக ராணுவ வீரர் பழனியின் உடலுக்கு முப்படை வீரர்கள், ஆட்சியர், காவல்துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில்  வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் பழனியின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க சொந்த ஊரில் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.முன்னதாக பழனியின் குடும்பத்திற்கு முதலமைச்ச்ர ரூ.20 லட்சம் நிவாரண உதவி அளிப்பதாகவும் தகுதி அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.