×

தீபாவளி பண்டிகைக்கு சர்க்கரைக்கு பதில் பணம்! அமைச்சர் அறிவிப்பு…

புதுச்சேரியில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தீபாவளி பண்டிகைக்கு சர்க்கரைக்கு பதில் பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாக அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தீபாவளி பண்டிகைக்கு சர்க்கரைக்கு பதில் பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாக அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசால் இரண்டு கிலோ சர்க்கரை வழங்கப்படும். அதன்படி அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச சர்க்கரைக்கு பதிலாக ரூ 75 பணமாக அனைத்து
 

புதுச்சேரியில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தீபாவளி பண்டிகைக்கு சர்க்கரைக்கு பதில் பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாக அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார். 

புதுச்சேரியில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தீபாவளி பண்டிகைக்கு சர்க்கரைக்கு பதில் பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாக அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசால் இரண்டு கிலோ சர்க்கரை வழங்கப்படும். அதன்படி அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச சர்க்கரைக்கு பதிலாக ரூ 75 பணமாக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். மேலும்  புதுச்சேரி கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் 38 ஆயிரம் பேருக்கு தலா ரூ-2000 வீதம் தீபாவளி பரிசுப் பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

அனைத்து நியாய விலைக்கடை ஊழியர்களுக்கும் 2 மாத சம்பளம் மற்றும் ரூ.5,000 போனஸ் முன்பணமும் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது.