×

திரைத்துறையினர் போஸ்ட் புரொடக்ஷன்ஸ்  பணிகளுக்கு அனுமதி கொடுத்ததற்கு நன்றி- தயாரிப்பாளர்கள்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்கு பிந்தய போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை செய்வதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்கு பிந்தய போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை செய்வதற்காக அனுமதி அளிக்க
 

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்கு பிந்தய போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை செய்வதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்கு பிந்தய போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை செய்வதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து வரும் 11 ஆம் தேதி முதல் படத்தொகுப்பு, குரல் பதிவு, கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராபிக்ஸ், டிஐ எனப்படும் நிறகிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகிய பணிகளுக்கு மட்டும் அதிகபட்சம் 5 பேருடன் பணியாற்ற தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட முக்கிய தயாரிப்பாளர்களான இயக்குனர் பாரதிராஜா, கலைப்புலி S. தாணு, T.G. தியாகராஜன் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு முதலமைச்சர் அமைச்சர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களளின் பணிவான வணக்கம். கொரோனாவின் பாதிப்பினால் 50 நாட்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. இந்த நிலையில் கடந்த மே 4-ம் தேதி குறைந்த பட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து இந்த பணிகளுக்காக 50 நாட்களாக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவைகளை முடித்து, படங்களை தயார் செய்ய முடியும் என்று தங்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.

எங்களின் கோரிக்கையை கனிவாக கவனித்து உடனே நடவடிக்கை எடுத்து, நாங்கள் கேட்டுக்கொண்டது போலவே, தமிழ் திரைப்பட துறை போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை 11.5.2020 முதல் செய்து கொள்ள தாங்கள் அனுமதி அளித்து, தமிழ் சினிமாவை காக்கும் செயலை செய்ததற்காக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த நேரத்தில் எங்களின் கோரிக்கையை தங்களின் கவனத்திற்கு உடனே கொண்டு வந்து அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க அணைத்து முயற்சிகளையும் செய்த மாண்புமிகு அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.