×

திருவோண நட்சத்திரகாரர்கள் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்!

திருவோண நட்சத்திரகாரர்களின் இயல்பான குணாதிசயங்கள் பற்றியும் அவர்கள் வழிபட வேண்டிய கோயில்கள் பற்றியும் பார்போம். திருமால் அவதரித்த நட்சத்திரமாக திருவோணம் நட்சத்திரம் கருதப்படுகிறது.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நீதி நெறி தவறாதவர்களாகவும் சீரிய வழியில் பொருள் தேடுபவர்களாகவும் இருப்பார்கள் . மற்றவர்கள் தவறு செய்யும் போது அதை துணிந்து திருத்த முயற்சி செய்பவர்களாகவும்,சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவர்களாகவும் இந்த நட்சத்திரகாரர்கள் இருப்பார்கள். இந்த நட்சத்திரகாரர்கள் பல சாஸ்திரங்கள் அறிந்த பண்டிதர்களாகவும் ,தைரியசாலியாகவும், மிகப் பெரிய தனவந்தர்களாகவும் இவர்கள் இருப்பார்கள் என்று
 

திருவோண நட்சத்திரகாரர்களின் இயல்பான குணாதிசயங்கள் பற்றியும் அவர்கள் வழிபட வேண்டிய கோயில்கள் பற்றியும் பார்போம்.

திருமால் அவதரித்த நட்சத்திரமாக திருவோணம் நட்சத்திரம் கருதப்படுகிறது.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நீதி நெறி தவறாதவர்களாகவும்  சீரிய வழியில் பொருள் தேடுபவர்களாகவும் இருப்பார்கள் .

மற்றவர்கள் தவறு செய்யும் போது அதை துணிந்து திருத்த முயற்சி செய்பவர்களாகவும்,சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவர்களாகவும் இந்த நட்சத்திரகாரர்கள் இருப்பார்கள். 

இந்த நட்சத்திரகாரர்கள் பல சாஸ்திரங்கள் அறிந்த பண்டிதர்களாகவும் ,தைரியசாலியாகவும், மிகப் பெரிய தனவந்தர்களாகவும் இவர்கள் இருப்பார்கள் என்று பல்வேறு ஜோதிட கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நட்சத்திரகாரர்கள் ஆயகலை அறுபத்து நான்கையும் கற்றவர்கள் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றது.

இவர்கள் எப்பொழுதும் தூய ஆடையை விரும்புவார்கள். மேலும் அவர்களுக்கென தனிக்கொள்கை உடையவராகவும், கோபப்பட்டு உடனே சாந்தமடைபவராகவும் இருப்பார்கள்.

கடல் கடந்து சென்றாலும், கலாசாரத்தை மறக்க மாட்டார்கள். இங்கிதமாகவும் இதமாகவும் பேசும் இவர்கள், எந்த உயிருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்கள். நீதிமானாகவும் பழி பாவத்துக்கு அஞ்சி நடப்பவராகவும் வாழ்வார்கள்.

சனியின் பூரண ஆதிக்கத்தில் பிறந்திருக்கும் இவர்களுக்கு திருமாலிடம் மாறாத பக்தி இருக்கும். சிவாம்சத்தின் சாரமாக சனி இருந்தாலும், பெருமாளை வழிபடுவதையே மிகவும் விரும்புவீர்கள்.

சயனக் கோலத்தில் மகா விஷ்ணு அரங்கநாதப் பெருமாளாக சேவை சாதிக்கும் கோயில்கள் அனைத்தும் நீங்கள் வழிபட உகந்தவை ஆகும். 

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பௌர்ணமி தினத்திலோ அல்லது அவர்களுடைய ஜென்ம நட்சத்திர நாளில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது வந்தால் அவர்களது வாழ்வில் சகல செல்வங்களையும் பெறலாம்.

உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரன் ரிஷபத்தில் உச்சமும், விருச்சகத்தில் நீசமும்,கடகத்தில் ஆட்சியும் பெறுகிறார். சந்திரனுக்கு பகை வீடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரனின் நட்பு வீடு மிதுனம், சிம்மம், கன்னி. சமவீடுகள் மேஷம், துலாம், தனுசு, மகம் கும்பம், மீனம், நீசவீடு விருச்சிகம்.நட்பு கிரகங்கள் சூரியன், குரு ஆகும்.

உங்களுடைய ஜனன ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து இருந்தால் கீழ் காணும் பரிகார கோயில்களுக்கு சென்று பரிகாரம் செய்து வர மேன்மையான பலன்களை பெறலாம்.

வழிபடவேண்டிய தெய்வம் : சந்திரன், பெருமாள், சிவன் 

வழிபாட்டு கோயில்கள் : திருப்பதி, சோமமங்கலம், திங்களூர், காவேரி பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்,