×

திருப்பதி ஏழுமலையானுக்கு ஊடல் உற்சவம் 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்கழி பௌர்ணமி தினத்தில் ஊடல் உற்சவ விழா நடைபெற்றது. திருப்பதி : உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத பௌர்ணமி தினத்தில் ஊடல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல் திருமலையில் நேற்று முன்தினம் மாலை இந்த உற்சவம் நடைபெற்றது. தினம் தினம் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அருள் புரிவதிலேயே ஆண்டு முழுவதும் ஏழுமலையான் கவனம் செலுத்துவதால் அவர் ஸ்ரீதேவி,பூதேவி தாயார்களை கண்டுகொள்வதில்லை. இதனால்
 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்கழி பௌர்ணமி தினத்தில் ஊடல் உற்சவ விழா நடைபெற்றது.

திருப்பதி :

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத பௌர்ணமி தினத்தில் ஊடல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல் திருமலையில் நேற்று முன்தினம் மாலை இந்த உற்சவம் நடைபெற்றது.

தினம் தினம் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அருள் புரிவதிலேயே ஆண்டு முழுவதும் ஏழுமலையான் கவனம் செலுத்துவதால் அவர் ஸ்ரீதேவி,பூதேவி தாயார்களை கண்டுகொள்வதில்லை.

இதனால் ஏழுமலையான் மீது  கோபம் கொள்ளும் நாச்சியார்கள் ஏழுமலையான் மார்கழி மாத பௌர்ணமி தினத்தில் வீதி உலா முடிந்து கோயிலினை நோக்கி  வருகின்ற பொழுது அவரை உள்ளே வர அனுமதிக்காமல் அவருடன் சண்டையிட்டுக் கொள்வதை போல் ஒரு நிகழ்வு, காலம் காலம் ஆக திருமலையில் நடைபெறும் இத்தகைய சிறப்பு வாய்ந்த உற்சவத்தினை ஊடல் உற்சவம் என்று அழைக்கின்றனர்.

ஊடல் உற்சவத்தினை முன்னிட்டு ஸ்ரீதேவி,பூதேவி நாச்சியார்கள் ஒருபுறமும், மலையப்ப சாமி எதிர்புறமும் நின்று கொண்டு தாயார்கள் ஏழுமலையான் மீது பூப்பந்து எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினர். இருபுறமும் அர்ச்சகர்கள் நின்றுகொண்டு பூப்பந்துகளை எரியும் சடங்கில் கலந்துகொண்டனர்.

அதனையடுத்து ஏழுமலையானை அர்ச்சகர்கள் சமாதானப்படுத்தி கோயிலுக்குள் அழைத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானையும் தாயாரையும் தரிசனம் செய்தனர்.

இந்த ஊடல் உற்சவ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது, 

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அடுத்த மார்ச் மாதத்துக்குள் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் இப்பயிற்சியைப் பெறுவதற்கு வரும் இளைஞர்களுக்கு உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தானம் இலவசமாக அளிக்கும் என்ற கூடுதல் தகவலையும் தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.