×

திருச்சி அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ.விசுவநாதம் கல்லூரியில் போராட்டம் நடத்தத் தடை..!

அமைச்சர் விஜய பாஸ்கர் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையையும் மீறி போராட்டம் தொடர்ந்தது. தமிழகம் முழுவதிலும் உள்ள 18,000 அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு, உயர்படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 25 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் விஜய பாஸ்கர் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையையும் மீறி போராட்டம் தொடர்ந்தது. அதனால், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதனால், இன்று
 

அமைச்சர் விஜய பாஸ்கர் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையையும் மீறி போராட்டம் தொடர்ந்தது.

தமிழகம் முழுவதிலும் உள்ள 18,000 அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு, உயர்படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 25 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் விஜய பாஸ்கர் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையையும் மீறி போராட்டம் தொடர்ந்தது. அதனால், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதனால், இன்று காலை மருத்துவ கூட்டமைப்பு சங்கங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக திரும்பப்பெறுவதாக தெரிவித்தனர். 

இந்நிலையில், 8 ஆவது நாளாக இன்றும் திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ.விசுவநாதம் கல்லூரியில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தவிருந்ததற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுக் கண்காணித்து வருவதால் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.