×

தியேட்டரில் டெங்கு கொசு இருந்தால் 20 ஆயிரம் அபராதம்…!

வீட்டைச் சுற்றி நல்ல தண்ணீர் தேங்க விடாமலும், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். டெங்குகாய்ச்சல் பரவி வருவதால், அதனைத் தடுக்கும் தீவிர பணிகளில் தமிழக அரசும், மாநகராட்சியும் ஈடுபட்டுள்ளனர். வீட்டைச் சுற்றி நல்ல தண்ணீர் தேங்க விடாமலும், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மாவட்ட ஆணையாளர் மகேஸ்வரி பொன்னகரம் சாலையைச் சுற்றியுள்ள கட்டிடங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, அங்கு
 

வீட்டைச் சுற்றி நல்ல தண்ணீர் தேங்க விடாமலும், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். 

டெங்குகாய்ச்சல் பரவி வருவதால், அதனைத் தடுக்கும்  தீவிர பணிகளில் தமிழக அரசும், மாநகராட்சியும் ஈடுபட்டுள்ளனர். வீட்டைச் சுற்றி நல்ல தண்ணீர் தேங்க விடாமலும், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், தருமபுரி மாவட்ட ஆணையாளர் மகேஸ்வரி பொன்னகரம் சாலையைச் சுற்றியுள்ள கட்டிடங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, அங்கு இரு திரையரங்குகளிலிருந்த தண்ணீர் தொட்டியில் நிறைய டெங்கு கொசுக்கள் உருவாகி இருந்தது தெரிய வந்தது. அதனால் அந்த இரண்டு திரையரங்குகளுக்கு தலா 10 ஆயிரம் வீதம் 20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய மாவட்ட ஆணையாளர் மகேஸ்வரி, அரசின் உத்தரவின் படி நகராட்சி நிர்வாகம் களப் பணியாளர்களை வைத்து டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அரசின் உத்தரவை மீறி வீட்டைச் சுற்றியோ அல்லது காலி மனைகளிலோ தண்ணீர் தேங்கி டெங்கு கொசு உருவாகக் காரணமாக உள்ளவர்களுக்கு பொது சுகாதார சட்டம் 1939 ன் கீழ் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.