×

தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும் தான் பேனர் வைக்கவில்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் வைக்க வில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் வைக்க வில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத தலைமைச்செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கரணையில்
 

தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் வைக்க வில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் வைக்க வில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத தலைமைச்செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ பலியான சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் லட்சுமி நாராயணன், கண்ணதாசன் ஆகியோர் முறையிட்டனர். வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள்,  “இன்னும் எத்தனை பேரின் ரத்தம் சாலையில் தேய்க்கப்படவேண்டும் எனவும், இதுதான் மனித உயிருக்கு அளிக்கும் மரியாதையா? அனைத்து கட்சிகளும் பேனர்கள் வைக்கக்கூடாது பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் கீழ்நிலை ஊழியர் ஒருவரை பொறுப்பாக்கி அவர்மீது நடவடிக்கை எடுக்காதீர்கள், தவறிழைத்த நபரை முறையாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுங்கள். ஆணையர் எடுக்கும் நடவடிக்கையை தலைமைச் செயலர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும். தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் வைக்கவில்லை” என வேதனை தெரிவித்தனர்.