×

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி.. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால், அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரம் பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, கொரோனா அறிகுறி இருந்தவர்களின் ரத்த
 

உலகையே அச்சுறுத்தி வரும்  கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும்  கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால், அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரம் பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, கொரோனா அறிகுறி இருந்தவர்களின் ரத்த மாதிரியைச் சோதனை செய்து பார்த்ததில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் தேதி அயர்லாந்தின் டப்ளின் நகரிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். 

அவரது ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் சோதித்துப் பார்த்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் இன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல் வெளியாகின்றன.