×

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 38 ஆக அதிகரிப்பு

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உலகம் முழுவதும் 5
 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  உலகம் முழுவதும் 5 லட்சத்து 65ஆயிரத்து 9  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 25 ஆயிரத்து 410  பேர் பலியாகி  உள்ளனர் .  

இந்தியாவைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆகவும்,  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 874ஆகவும் அதிகரித்துள்ளது.  இதில் 73 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35லிருந்து 38ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் இருவர் சென்னையை சேர்ந்தவர், மற்றொருவர் சேலத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.