×

தமிழகத்தில் காற்று மாசுபாடு வெறும் வதந்தி : ராதாகிருஷ்ணன் தகவல்..!

டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு தமிழகத்திற்கும் வரும் எனத் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. தீபாவளி முடிந்த பின்னர் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடை செய்த பின்னர் அந்த நிலங்களை எரிப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. டெல்லி முழுவதும் காற்று மாசுபட்டால் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு தமிழகத்திற்கும் வரும் எனத் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. திருச்சி நடந்த
 

டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு தமிழகத்திற்கும் வரும் எனத் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. 

தீபாவளி முடிந்த பின்னர் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடை செய்த பின்னர் அந்த நிலங்களை எரிப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. டெல்லி முழுவதும் காற்று மாசுபட்டால் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு தமிழகத்திற்கும் வரும் எனத் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. 

திருச்சி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அதன் பின், செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், இது வரை தமிழகத்தில் உள்ள 9,940 பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாகவும், திறந்த வெளியில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்து 1077, 1070 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து காற்று மாசுபாடு குறித்துப் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் காற்று மாசுபாடு ஏற்படும் என்று பரவி வரும் கருத்துக்கள் அனைத்தும் வதந்தி என்று கூறியுள்ளார். மேலும், காற்று மாசுபாடு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.