×

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு!

கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. வெப்பம் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே பரவலாக மசாஹே பெய்து வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை,பவானி,சென்னிமலை கொடுமுடி,காஞ்சிகோயில்,திங்களூர், விஜயமங்கலம் உள்ளிட்ட நேற்று இரவு கனமழை பெய்தது. இதே போல் நாமக்கல் மாவட்டத்திலும் சுமார் இரண்டு மணிநேரம் இடைவிடாது மழை பொழிந்தது. மேலும் திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய
 

கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

வெப்பம் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே  பரவலாக மசாஹே  பெய்து வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை,பவானி,சென்னிமலை கொடுமுடி,காஞ்சிகோயில்,திங்களூர், விஜயமங்கலம் உள்ளிட்ட நேற்று இரவு கனமழை பெய்தது.

இதே போல் நாமக்கல் மாவட்டத்திலும் சுமார் இரண்டு மணிநேரம் இடைவிடாது மழை பொழிந்தது.  மேலும் திருப்பூர்,  திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் திருவண்ணாமலை  செங்கத்தில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பலியானார். 

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாகக் கோவை, நீலகிரி,திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.