×

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 3550 ஆனது

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 36லட்சமாக அதிகரித்துள்ளது. இரண்டு லட்சத்து 48 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 3023பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேலும் 527பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3550 ஆக
 

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 36லட்சமாக அதிகரித்துள்ளது. இரண்டு லட்சத்து 48 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 3023பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

 


இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேலும் 527பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3550 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 30-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 1409-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இன்று மட்டும் 12,863 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,53,489 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 
31-ஆக அதிகரித்துள்ளது,தமிழகத்தில் இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளது.