×

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக மழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாலை ஆழ்வார்பேட்டை, கே.கே நகர், கிண்டி, மீனம்பாக்கம், புரசைவாக்கம், தி.நகர்,
 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு  லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு  லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை விட்டுவிட்டுப்  பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாலை ஆழ்வார்பேட்டை, கே.கே நகர், கிண்டி, மீனம்பாக்கம், புரசைவாக்கம், தி.நகர், போரூர் மற்றும் கோயம்பேடு அம்பத்தூர், பூந்தமல்லி, மாதவரம், கொளத்தூர், புழல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும்  கனமழை பெய்தது. இதே போல் நீலகிரி மாவட்டம் உதகை, தென்காசி, திருவாரூர், நாகை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

இந்நிலையில்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாகக் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.