×

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பம் சலனம் காரணமாகச் சென்னையில் கடந்த ஒருவார காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பம் சலனம் காரணமாகச் சென்னையில் கடந்த ஒருவார காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாலை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர் உள்ளிட்ட பல
 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பம் சலனம் காரணமாகச் சென்னையில் கடந்த ஒருவார காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பம் சலனம் காரணமாகச் சென்னையில் கடந்த ஒருவார காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாலை  கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை,  தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. மேலும் திருவள்ளூர், திருத்தணி, விழுப்புரம், போன்ற இடங்களில் மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. 

இந்நிலையில்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில்  லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழையும், திருச்சி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.