×

தமிழகத்தில் 4,000 பேருக்கு டெங்கு! 39 லட்சம் அபராதம்!

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவ மழை துவங்கிய பிறகு டெங்கு காய்ச்சல் பரவலாக பரவத் துவங்கியது. சுற்றுப்புறங்கள் சுத்தமாக இல்லாதது, மழை நீரை திறந்தவெளியில் தேக்கி வைப்பது போன்றவை டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சுமார் 4,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மாநில சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை
 

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவ மழை துவங்கிய பிறகு டெங்கு காய்ச்சல் பரவலாக பரவத் துவங்கியது. சுற்றுப்புறங்கள் சுத்தமாக இல்லாதது, மழை நீரை திறந்தவெளியில் தேக்கி வைப்பது போன்றவை டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதற்கு  முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சுமார் 4,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மாநில சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் போதிய தொழில் நுட்பங்கள் உள்ளன என்றும், தமிழகம் முழுவதும் டெங்கு கொசுக்கள் உருவாகும் வகையில் சுற்றுப்புறங்களை வைத்திருந்த வீடு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து இதுவரையில் ரூ39 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.