×

தமிழகத்தில் 11 நகரங்களில் சதமடித்த வெயில்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைத்துவருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது. தமிழகத்தில் இன்று 11 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி அளவை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 107
 

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைத்துவருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது.

தமிழகத்தில் இன்று 11 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி அளவை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 107 டிகிரி, மதுரை 106.5, கடலூர் 104, வேலூர், திருத்தணி 106.3, திருச்சி 100.9, மதுரை விமான நிலையம் 102,தூத்துக்குடி 102, பரங்கிப்பேட்டை 103, புதுச்சேரி 102.5 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 106.5 மற்றும் நுங்கம்பாக்கம் 106.3 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.