×

தனுசு ராசி குருபெயர்ச்சி பலன்கள் (2018-2019)

துலாம் ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடமான விருச்சிக ராசியில் பெயர்ச்சியாக இருப்பதால் வரக்கூடிய குரு பெயர்ச்சி எவ்வாறான பலன்களை தரும் என்பதைபற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம். தனுசு ராசிக்கு அதிபதியாக குரு இருப்பதால் மிகவும் நேர்மையானவர்களாகம்,நல்ல உள்ளம் படைத்தவர்களாகவும் நீங்கள் விளங்குவீர்கள். உங்கள்ராசிக்கும் மற்றும் 4 க்கு அதிபதியான குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 11 இடத்தில் இருந்து கொண்டு பல்வேறு நன்மைகளையும்,தாராள தனவரவு
 

துலாம் ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான்  உங்கள் ராசிக்கு 12 ஆம் இடமான விருச்சிக ராசியில் பெயர்ச்சியாக இருப்பதால் வரக்கூடிய குரு பெயர்ச்சி எவ்வாறான பலன்களை தரும் என்பதைபற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

தனுசு ராசிக்கு அதிபதியாக குரு இருப்பதால் மிகவும் நேர்மையானவர்களாகம்,நல்ல உள்ளம் படைத்தவர்களாகவும் நீங்கள் விளங்குவீர்கள்.

உங்கள்ராசிக்கும் மற்றும் 4 க்கு அதிபதியான குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு  11 இடத்தில் இருந்து கொண்டு பல்வேறு நன்மைகளையும்,தாராள தனவரவு குடும்பத்தில் சுபிட்சம் ,சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு தொழில் வியாபாரத்தில் மேன்மை, உத்தோயகத்தில் உயர்வு போன்ற மேன்மையான பலன்களை கொடுத்து வந்தார்.

குரு பகவான் வருகின்ற அக்டோபர் மாதம்  4 ஆம் தேதி முதல் ராசிக்கு 12 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ,பொருளாதார நிலையில் ஏற்றதாழ்வுகள்,அசையும் அசையா சொத்துகள் மூலம் செலவுகள்,தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம் .

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 4 ஆம் இடமான சுகஸ்தானத்தினை குரு பார்ப்பதால் தாயார் உடல்நிலையில் ஏற்பட்டுவந்த பின்னடைவு நீங்கும் ,வீடு, வண்டி, வாகனம் மூலம் நன்மை உண்டாகும் புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பும் கைகூடும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு  6 ஆம் இடமான மறைவு ஸ்தானத்தினை குரு பார்ப்பதால் நீண்டநாட்களாக ஏற்பட்டு வந்த வயிற்றுவலி நீங்கும். கடன் சுமை குறையும் எதிரிகளால் ஏற்பட்டு வந்த தொல்லைகள் நீங்கும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 8 ஆம் இடம் ஆகிய ஆயுள் ஸ்தானத்தினை குருபார்ப்பதால் கடல் கடந்து செல்லும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். பணவரவுகள் அதிகரிக்கும் நெருங்கியவர்களிடையே ஏற்பட்டு வந்த மனகசப்புகள் மாறும். அடிவயிற்று பிரச்சினைகள் தீரும்.

மாணவர்கள்: தனுசு ராசி மாணவர்களுக்கு பண விரயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வெளிநாட்டு கல்வி தொடர்பான பணிகள் காலதாமதமாகும் .  

பெண்கள் : தனுசு ராசி பெண்களுக்கு வரக்கூடிய குரு பெயர்ச்சியானது சுமாரான பலன்களை கொடுக்கும்.  வீண் விரயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.  உடல் நலத்தில் கவனம் தேவை.

கலைஞர்கள்: தனுசு ராசி கலைத்துறையினருக்கு உடல் உழைப்பு அதிகமாகவும்,வருமானம் குறைவாகவும் இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் நிதானமாக செயல்படுவது மிகுந்த நன்மை பயக்கும்.

அரசியல்வாதிகள் தனுசு ராசி அரசியல்வாதிகள் மிகவும் நிதானம், மற்றும் பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். கூட்டனி கட்சியை தேர்வு செய்வதில் எச்சரிக்கையுடன் செயல் படவேண்டும்.

விவசாயிகள்: தனுசு ராசி விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழிலில் அதிக முதலிடுகளை தவிர்ப்பது நன்மை உண்டாக்கும். விவசாயத்திற்கு தேவையான நீர் பாசன வசதிகள் கிடைக்கும். விவசாய கடன் ரத்தாவது கால தாமதமாகும்.

பரிகாரம்: தனுசு ராசியில் பிறந்தவர்கள் காஞ்சிபுரம் காமட்சி அம்மனையும், ஏகாம்பரேஸ்வரரையும், சித்திரகுப்தனையும் தரிசனம் செய்து வர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.