×

தனிமைப்படுத்துதல் என்ற பெயரில் ஊசிப்போட்டு கொலை செய்கின்றனர்! கொரோனா வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர்!!

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் பரவி வருவதால், சமூக ஊடகங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக ஏராளமான தவறான தகவல்கள் பரவி வருகின்றன. கொரானா வைரஸால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருப்பது குறித்து சென்னையில் வேகமாக வைரசை போல வதந்திகளும் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக கோயம்புத்தூரில் உள்ள குனியமுத்தூர்
 

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் பரவி வருவதால், சமூக ஊடகங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள்  வழியாக ஏராளமான தவறான தகவல்கள் பரவி வருகின்றன. கொரானா வைரஸால்  அனைத்து கடைகளும் மூடப்பட்டிருப்பது குறித்து சென்னையில் வேகமாக வைரசை போல வதந்திகளும் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக கோயம்புத்தூரில் உள்ள குனியமுத்தூர் அருகே உள்ள ‘ஹீலர்’ பாஸ்கர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் நோய் பாதிப்பு இல்லாதவர்களை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று தனிமைப்படுத்தப்பட்டு ஊசி போட்டு கொலை செய்யப்போகின்றனர் என்பது போல ஒரு வீடியோவை ஹீலர் பாஸ்கர் வெளியிட்டார். ஹீலர் பாஸ்கரை கைது செய்யுங்கள் என சமூகவலைதளங்களில் எழுந்த கோரிக்கையை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை உறுதி அளித்துள்ளது.