×

தத்தெடுத்த பிள்ளைக்குக் காசநோய் : ஒதுக்கி வைத்த பெற்றோர்.. உதவி செய்த நண்பர்கள்!

தேனி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் குழந்தையின்றி தவித்து வந்துள்ளனர். அதனால், முத்துப்பாண்டி என்ற பையனைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் குழந்தையின்றி தவித்து வந்துள்ளனர். அதனால், முத்துப்பாண்டி என்ற பையனைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். அவனைத் தத்தெடுத்த பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறந்து விட்டதால், அவனைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். அதனைக்கண்டு மனம் உடைந்த முத்துப்பாண்டி அவர்களிடம் இருந்து விலகிச் சென்று கோவையில் உள்ள
 

தேனி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் குழந்தையின்றி தவித்து வந்துள்ளனர். அதனால், முத்துப்பாண்டி என்ற பையனைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் குழந்தையின்றி தவித்து வந்துள்ளனர். அதனால், முத்துப்பாண்டி என்ற பையனைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். அவனைத் தத்தெடுத்த பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறந்து விட்டதால், அவனைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். அதனைக்கண்டு மனம் உடைந்த முத்துப்பாண்டி அவர்களிடம் இருந்து விலகிச் சென்று கோவையில் உள்ள ஒரு கல்குவாரியில் வேலை செய்து வந்துள்ளார். 

சிறிது காலமாக அங்கு வேலை பார்த்து வந்த முத்துப்பாண்டிக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. முத்துப்பாண்டி வேலை செய்து வந்த கல்குவாரியின் உரிமையாளர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். முத்துப்பாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு காசநோய் இருப்பதாகக் கூறியுள்ளனர். இந்த தகவலை உடனடியாக அவனது பெற்றோர்களுக்கு தெரிவிக்கலாம் என்று கல்குவாரியில் வேலை செய்யும் நபர்கள், முத்துப்பாண்டியை தத்தெடுத்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அப்போது அவனை இங்கே அனுப்ப வேண்டாம் என்று அவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. 

அதனையடுத்து, கல்குவாரியில் வேலை செய்யும் இளைஞர்கள் சேர்ந்து கல்குவாரி அருகேயே ஒரு கொட்டகை அமைத்து அவனை அங்கே தங்க வைத்துள்ளனர். அதன் பின்னர், மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். ஆட்சியரின் உத்தரவின் பேரில் முத்துப்பாண்டிக்கு தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. தத்தெடுத்த பிள்ளையை காசநோயால் பெற்றோர் கைவிட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.