×

தணிகாசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி; மேலும் இரண்டு வழக்குப்பதிவு!

மே 18 ஆம் தேதிக்கு பிறகும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும்
 

மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருப்பினும் கொரோனாவுக்கு தனியாக மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.  இதனிடையே கொரோனா தடுப்பு மருந்து தன்னிடம் உள்ளதாகவும், கொரோனாவை தன் உடம்பில் செலுத்தினால் தன்னுடைய மருந்தினால் மீண்டு வந்து நிரூபிக்கிறேன்  என சித்த மருத்துவர் தணிகாசலம் கூறியிருந்தார். 

இதையடுத்து தணிகாசலம் மீது சுகாதாரத்துறை சார்பில்  காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி வதந்தி பரப்பியதாக தணிகாசலத்தை  மத்திய குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்தனர்.   

இந்நிலையில் தணிகாசலம் மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரின் ஜாமீன் மனுவையும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.