×

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது!

இன்று காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,765க்கு விற்கப்பட்டது சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. அந்த வகையில் இன்று காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,765க்கு விற்கப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 228 அதிகரித்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.30,120ஆக
 

இன்று காலை நேர நிலவரப்படி  சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின்  விலை  ரூ. 3,765க்கு விற்கப்பட்டது

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது. 

கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. அந்த வகையில் இன்று காலை நேர நிலவரப்படி  சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின்  விலை  ரூ. 3,765க்கு விற்கப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ. 228 அதிகரித்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.30,120ஆக உயர்ந்தது.  தங்கம் 30 ஆயிரத்தைத் தொட்டது வரலாறு காணாத  நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. அதேபோல் வெள்ளியானது  கிராமுக்கு ரூ.2.60 உயர்ந்து, ரூ.55.20க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் மாலை  நேர நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.24 குறைந்து ரூ.3,741 ஆக உள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.29,928 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் 54.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.