×

தங்க கட்டி தருவதாக நகைப்பட்டறை உரிமையாளரிடம் 50 பவுன் நகைகள் கொள்ளை

கோயம்புத்தூர் கோவையில் தங்கக் கட்டி தருவதாக நகைப்பட்டறை உரிமையாளரிடம் 50 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களைக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை செட்டி வீதியை சேர்ந்தவர் சரவணன். இவர் சொந்தமாக நகை பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது பட்டகறைக்கு வந்த 2 மர்ம நபர்கள், தாங்கள் தங்க வியாபாரம் செய்து வருவதாகவும், தங்களிடம் நகைகளை கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரிஜினல் தங்க கட்டி தருவதாக கூறி உள்ளனர். இதை உண்மை என
 

கோயம்புத்தூர்


கோவையில் தங்கக் கட்டி தருவதாக நகைப்பட்டறை உரிமையாளரிடம் 50 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களைக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை செட்டி வீதியை சேர்ந்தவர் சரவணன். இவர் சொந்தமாக நகை பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது பட்டகறைக்கு வந்த 2 மர்ம நபர்கள், தாங்கள் தங்க வியாபாரம் செய்து வருவதாகவும், தங்களிடம் நகைகளை கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரிஜினல் தங்க கட்டி தருவதாக கூறி உள்ளனர்.

இதை உண்மை என நம்பிய சரவணன், தன்னிடம் இருந்த 50 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை தரம் பார்த்துவிட்டு வருவதாக கூறி விட்டு சென்ற அவர்கள், மீண்டும் பட்டறைக்கு வரவில்லை. மேலும், அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அது அணைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனால் தனது நகைகள் திருடப்பட்டதை உணர்ந்த சரவணன், கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.