×

டெல்லியிலுள்ள தமிழர்களை பத்திரமா பாத்துக்கொங்க… அரவிந்த் கெஜ்வாலுக்கு முதலமைச்சர் கடிதம்!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27லட்சத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 91ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெல்லி தப்லிஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்திற்கு திரும்பாமல் அங்கேயே 559 பேர்
 

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27லட்சத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 91ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் டெல்லி தப்லிஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்திற்கு திரும்பாமல் அங்கேயே 559 பேர் உள்ளனர். அவர்களில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ளனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 559 பேருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தை சேர்ந்த 559 பேர் டெல்லியில் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும் உள்ளனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சையளிப்பதுடன் ஆரோக்கியமான உணவு அளித்து பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுமாறும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சரியான மருத்துவ உதவி அளித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்