×

ஜெருசலேம் புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.20,000/-த்தில் இருந்து ரூ.37,000/- ஆக உயர்வு – முதல்வர் பழனிச்சாமி

முதல்வர் மற்றும் துணை முதல்வர் சென்னை நந்தம்பாக்கத்தில்அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாடினர். கொண்டாட்டதத்தின் ஒரு பகுதியாக கேக் வெட்டி கொண்டாடினர் ஓ.பி.எஸ் கேக் வெட்டி முதல்வருக்கு கொடுத்தார். தொடர்ந்து இருவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “கொரோனா சுழலில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.நாம் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இரண்டாயிரத்து 20 மற்றும் 21 ஆம் ஆண்டுக்கான
 

முதல்வர் மற்றும் துணை முதல்வர் சென்னை நந்தம்பாக்கத்தில்அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாடினர். கொண்டாட்டதத்தின் ஒரு பகுதியாக கேக் வெட்டி கொண்டாடினர் ஓ.பி.எஸ் கேக் வெட்டி முதல்வருக்கு கொடுத்தார். தொடர்ந்து இருவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “கொரோனா சுழலில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.நாம் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இரண்டாயிரத்து 20 மற்றும் 21 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைப்பதற்கு ஒரு கோடியிலிருந்து 5 கோடி வரை செலவிட உத்தரவு விடப்பட்டுள்ளது.வேறு எந்த இயக்கத்திலும் இல்லாத அளவிற்கு அதிமுக சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒன்றாக இருப்பது தமிழகத்திற்கு பெருமையாக உள்ளது. கிறிஸ்தவர்கள் புனித பயணத்திற்கு தமிழக அரசு சார்பாக நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜெருசலம் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு அரசு வழங்கும் 20 ஆயிரம் ரூபாய் இனி 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டணி வேறு கொள்கை வேறு, கொள்கை படி தான் செயல்படுவோம்” எனக் கூறினார்.