×

ஜெயலலிதா என்ற பெயர்தான் பிரச்னையா? அப்ப அம்பேத்கர் என வைத்து கொள்ளுங்கள்- சி.வி. சண்முகம்

டாக்டர்.ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்ற பெயரை மாற்றி கூட வேறு பெயர் வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் பல்கலைக்கழகத்துக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டது. விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜெ ஜெயலலிதா பல்கலைகழகம் இயங்கும் என அறிவித்ததுடன், விழுப்புரம் பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தில் டாக்டர். ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் பலகை வைத்து திறக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகத்துக்கான இடம்
 

டாக்டர்.ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்ற பெயரை மாற்றி கூட வேறு பெயர் வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் பல்கலைக்கழகத்துக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டது. விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜெ ஜெயலலிதா பல்கலைகழகம் இயங்கும் என அறிவித்ததுடன், விழுப்புரம் பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தில் டாக்டர். ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் பலகை வைத்து திறக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகத்துக்கான இடம் தேர்வு செய்யவுமில்லை, நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு மாதம் கடந்துவிட்ட நிலையில் கடந்த வாரம் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

கடந்த அதிமுக அரசு அறிவித்த டாக்டர். ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும், அதனை முடக்கக் கூடாது என்று கூறி இன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சி.வி சண்முகம், “ஜெ ஜெயலலிதா என்ற பெயர் தான் பிரச்சனை என்றால் அந்த பெயரை மாற்றி விட்டு கூட வேறு எந்த பெயரில் வேண்டுமானாலும் பல்கலைக்கழகத்தை இயக்குங்கள். தேவைப்பட்டால் அம்பேத்கர் பல்கலைக்கழகம் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.