×

ஜெயலலிதா அவர்களின் ஜாதக சூட்சமங்கள் : பிரபல ஜோதிடர் விளக்கம்!

மறைந்த ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில் உள்ள ராஜயோகங்களை பற்றி பிரபல நாளிதழில் பிரபல ஜோதிடர் ஒருவர் குறிப்பிட்டுள்ள ஜோதிடம் சார்ந்த விளக்கங்களை பற்றி விரிவாக பார்போம் . ஜெயலலிதா அவர்களுடைய ஜாதகம் ராஜயோகம் பொருந்திய அற்புதமான ஜாதகம் என்றும் அவர்களுடைய ஜாதகத்தில் கிரகங்களின் நிலைகள் அவை பெற்றுள்ள சார அமைப்புகள் பற்றியும் பிரபல ஜோதிடர் தன்னுடைய முப்பது ஆண்டுகால ஜோதிட அனுபவத்தினை வைத்து மிக துல்லியமாக பல்வேறு விளக்கங்களை நமக்கு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அவர்கள் மிதுன லக்னம்,
 

மறைந்த ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில் உள்ள ராஜயோகங்களை பற்றி பிரபல நாளிதழில் பிரபல ஜோதிடர் ஒருவர் குறிப்பிட்டுள்ள ஜோதிடம் சார்ந்த விளக்கங்களை பற்றி விரிவாக பார்போம் .

ஜெயலலிதா அவர்களுடைய ஜாதகம் ராஜயோகம் பொருந்திய அற்புதமான ஜாதகம் என்றும் அவர்களுடைய ஜாதகத்தில் கிரகங்களின் நிலைகள் அவை பெற்றுள்ள சார அமைப்புகள் பற்றியும் பிரபல ஜோதிடர் தன்னுடைய முப்பது ஆண்டுகால ஜோதிட அனுபவத்தினை வைத்து மிக துல்லியமாக பல்வேறு விளக்கங்களை நமக்கு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா அவர்கள் மிதுன லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் பிறந்துள்ளார்.

கேது திசையில் பிறந்த அவருக்கு நான்கு வயது முதல் உச்சம் பெற்ற சுக்கிர திசை நடப்பில் இருந்ததால் இளம் வயதிலேயே கலைத்துறையில் சாதனை புரிந்தார்.

சுக்கிரனின் தயவால் இவரால் கலைத்துறையில் முதலிடத்தில் இருக்கவும், அதன்பிறகும் தனது வசீகரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் முடிந்தது.

சூரியனும், சந்திரனும் முழுபலத்துடன் பௌர்ணமி யோகத்துடன் அமைந்த நிலையில், அதிகாரத்தைத் தரும் கிரகமான செவ்வாய் இவர்கள் இருவருக்கும் கேந்திர நிலையில் அமர்ந்து,

சந்திரனுடன் இணைந்து பூரண சுபத்துவ வலுவுடன் லக்னாதிபதி புதனைப் பார்த்ததால் சந்திர தசை, புதன் புக்தியில் 1983-ல் இவரது ஆசானால் இந்த நாயகி நேரடி அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதன்படி ஜெயலலிதா அவர்களுக்கு செவ்வாய் திசை ஆகஸ்ட் 1987-ல் ஆரம்பித்த ஓரிரு மாதங்களில் செவ்வாயின் சுய புத்தியிலேயே இவரை அரசியலுக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவரும், இவரது குருநாதருமான மன்னாதி மன்னன் 1987 டிசம்பரில் காலமானார்.

அது முதற்கொண்டு சுமார் மூன்றரை வருடங்கள் இவர் எதிர் கொண்ட எதிர்ப்புகள் எண்ணிலடங்காதவை மற்றும் தமிழகம் அறிந்தவை. ஏழு வருட செவ்வாய் திசையில் முதல் மூன்றரை வருடங்கள் அவர் அனுபவித்த துன்பங்களும், வேதனைகளும் ஏராளம்.

இவரது ஆறாம் வீட்டிற்கு கேந்திரத்திலும் பதினொன்றாம் வீட்டிற்கு திரிகோணத்திலும் அமர்ந்த செவ்வாய் தன் ஆறாம் வீட்டைத் தானே பார்த்து வலுப்படுத்தியதால் முதல் மூன்றரை வருடங்கள் கடுமையான எதிர்ப்புகளை கொடுத்து,

பிற்பகுதி மூன்றரை வருடங்களில் லாபாதிபதியாகவும், ராசியின் ராஜயோகாதிபதியாகவும் செயல்பட்டு லக்னாதிபதி புதனின் புக்தியில் இவரை முதன் முதலாக அரசியாக்கியது. 

மிதுன லக்னத்தின் ஒரே யோகரான ராகு இவருக்கு நன்மை தரும் இடமான மேஷத்தில் அமர்ந்து அந்த இடம் பதினொன்றாம் பாவமானதால் ராகுவும், யோக நிலையை தொடரும்படியாயிற்று. 

இங்கே பதினொன்றாமிடத்து மேஷ ராகுவை வலுப்பெற்ற குருபகவான் தனது சுப பார்வையால் பார்த்ததால் ராகு திசையும் இவருக்கு யோக திசையாகியது. அதேநேரத்தில் ராகு சனியின் பார்வையையும் பெற்றதால் சிறைவாசம் மற்றும் வழக்குகளையும் தந்தது. 

ஒரு ஜாதகத்தில் யோகாதிபதி குரு, சுக்கிரன் போன்ற அதி சுபராகி அவர் உச்ச வலுப் பெற்று ஜாதகத்தின் மற்ற கிரகங்களோடு சம்பந்தப்படும் போது தொடர்புள்ள அனைத்துக் கிரகங்களும் யோகர்களாகவே பலன் தருவார்கள்.

அதன்படி இங்கே பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்கிரன் பத்தாமிடத்தில் மாளவிகா யோக அமைப்பில் உச்சம் பெற்று, அவரது வீட்டில் கேது அமர்ந்ததால், கேது சுக்கிரனைப் போல பலன் தர வேண்டியவராகி, கேதுவின் சாரம் பெற்ற சந்திரன், செவ்வாய், குரு ஆகிய மூவரும் சுக்கிரனைப் போல நன்மைகளைத் தர வேண்டியவர்கள் ஆனார்கள்.

ஆனால் எந்த ஒரு மகாதசையும் சுயபுக்தி நன்மைகளைச் செய்யுமானால் பிற்பகுதி கெடுதல்களையும் தரும் எனும் விதிப்படி சுய புக்தி முழுக்க அவர் முதல்வராக இருந்த காரணத்தினால் அடுத்த நிலையில் இவர் சரிவுகளைச் சந்தித்தார்.

மேலும் எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி நேரங்களில் ஜாதகம் செயலற்றுப் போய் நற்பலன்களைத் தராது என்பதால் இவரது சிம்ம ராசிக்கு அஷ்டமச்சனி நடந்து கொண்டிருந்த 1996-ம் வருடம் கிரகங்களின் சாதகமற்ற அமைப்பினால் இவர் மிகப் பெரிய சரிவுக்குள்ளானார்.

ராகு திசை முழுக்கவே இவருக்கு ஏற்றமும், இறக்கமுமாகவே இருந்தது. அதற்கு ராகு செவ்வாயின் வீட்டில் இருந்ததும் ஒரு காரணம்.

அடுத்து இவரது ராசிக்கு ஏழரைச்சனி நடப்பில் இருந்த 2006-ம் வருடமும் இவரால் சாதிக்க இயலாமல் போனது. ஏழரைச்சனி ஜென்மத்தில் இருந்து விலகும் தருவாயில் 2011-ம் ஆண்டு மீண்டும் அரசியாகி தன் அந்திம காலம் வரை ஆட்சியில் இருந்தார்.

அஷ்டமாதிபதி புத்தியில் மரணம் நிகழும் என்பது ஜோதிட விதியாகும். பாதகாதிபதி கொடுத்துக் கெடுப்பார் என்பதும் ஒரு ஜோதிட சூட்சமம் ஆகும்.

அதன்படி ஜெயலலிதா அவர்கள் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் உலகமே வியக்கும் வண்ணம் தனித்து நின்று மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

அதற்கு முன்பு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இவர் அடைந்த வெற்றியினை அகில இந்தியாவும் மூக்கின் மேல் விரலை வைத்துப் பார்த்தது.

பாதகாதிபதியின் இன்னொரு பலனாக மரணத்திற்கு நிகரான ஒரு வலியாக இதே அஷ்டமாதிபதி புக்தியில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் தலைமை பதவியில் இருந்த போதே சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது கோட்சார அமைப்பில் இவரது ராசிநாதனான சூரியனும், லக்னாதிபதியான புதனும் ராகுவுடன் மிக நெருங்கி கிரகணமாகி இருந்தார்கள்.

குரு தனது காரகத்துவத்தின்படி இவரை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு சென்றாலும் ஆதிபத்தியத்தின்படி அமர்ந்த வீட்டிற்கு பாதகத்தை செய்ய வேண்டும் என்பதால்

ஏழாம் வீட்டின் காரகத்துவங்களை முழுக்கக் கெடுத்து இவருக்கு மண வாழ்வு என்பதே இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கி விட்டார் என்று  அந்த பிரபல ஜோதிடர் அந்த சிறப்பு கட்டுரையில் தெரிவித்து இருந்தார்.

அந்த பிரபல ஜோதிடர் இத்தகைய ஜோதிட விளக்கங்களை தந்ததுடன் தேர்தலில் ஜெயித்தவுடன் மருத்துவமனையில் இருப்பார் என்றும் தனது முந்தைய சிறப்பு கட்டுரைகளிலும் சொல்லியிருந்தது

ஜோதிடத்தின் மேல் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரையும் ஜெயலலிதா அவர்கள் இறப்பிற்கு பின்னர் மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.